புல்வாமா தாக்குதலில், அமெரிக்க சிம் கார்டு !

280

கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டாக இருந்து செயல்பட்டது அகிலதார் என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்தது, மேலும் இந்த தாக்குதலை தலைமையேற்று நடத்திய முதாசிர் கான் என்பவன் தரல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
.
அகிலதார் மற்றும் முதாசிர் கான் ஆகிய இருவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

அந்த போனுக்கு அவர்கள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். இதை புலனாய்வுத் துறையினர் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். அந்த போனில் இணைய தளம், பேஸ்புக், வாட்ஸ்- அப் சேவைகளையும் பெற்று இருக்கிறார்கள்.

மும்பையில் அதேபோல 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோதும் அவர்கள் வெளிநாட்டு சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர்.

அவற்றை இத்தாலி நாட்டில் இருந்து பெற்று இருந்தனர். இந்த சிம்கார்டுகளை இத்தாலியில் உள்ள ஒரு நிறுவனம் மூலமாக ஜாவீத் இக்பால் என்பவர் வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இத்தாலி போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

இதேபோல இப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களையும் கண்டுபிடிக்க புலனாய்வுத் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of