அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்லவேண்டாம் ? – ஸ்டீவ் ஹெர்மன்

163

புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு தலைவர் ஸ்டீவ் ஹெர்மன் வெளியிட்ட அறிக்கையில்.

பயங்கரவாதமும், பதற்றமும் நிலவுவதால், காஷ்மீருக்கு செல்ல வேண்டாம். பயங்கரவாதிகள் எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் சுற்றுலா தலங்கள், பஸ், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்கக்கூடும். ஆயுத மோதல் நடக்க வாய்ப்பு இருப்பதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.