மூளையை உண்ணும் அமீபா.. புதிதாக வரும் இன்னொரு ஆபத்து..

2753

சீனாவின் வூகான் நகரில் உருவான பெருந்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்கமே இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், தற்போது புதிய வைரஸ் ஒன்று அமெரிக்காவில் உருவாகியுள்ளது.

அதாவது, அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில், மூளையை உண்ணும் அமீபா வைரஸ் தாக்கப்பட்டு, 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உயிரிழந்த சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் நகரத்தின் பிற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, வாந்தி, தலைச்சுற்றல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் 1983 முதல் 2010ம் ஆண்டு வரை அமீபா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.