ரசிகர்களை பார்க்க முடியாததற்கு மன்னிப்பு கோரினார் – பிரபல நடிகர்

312

நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 15ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.4 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் 18ம் தேதி வீடு திரும்பினார். இதனிடையே அமிதாப் பச்சனின் உடல்நலன் குறித்து தெரிந்து கொள்வதற்காக அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்தனர்.

அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருவதால் தன்னால் வெளியே வந்து ரசிகர்களை பார்க்க முடியவில்லை எனவும் அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.