எந்த பாஜக தலைவருக்கும் கிடைக்காத பாக்கியம் அமித்ஷாவுக்கு கிடைத்துள்ளது..!

541

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த இல்லத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியேறி உள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லியில் கிருஷ்ணமேனன் மார்க் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால வாஜ்பாய் உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த இல்லம் தற்போது வரை காலியாகவே இருந்தது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கடந்த முறை பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா இந்த முறை நாட்டின் உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.

இதையடுத்து அமித்ஷாவுக்கு வாஜ்பாய் வசித்த இல்லம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 15ம் தேதி வாஜ்பாய் இல்லம் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த செவ்வாய்கிழமை (ஆக.27) அமித் ஷா அந்த இல்லத்துக்கு மகிழ்ச்சியுடன் குடி பெயர்ந்தார். முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்பர் சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of