விரைவில் தமிழ் மொழியில் பேசுவேன்..! -அமித்ஷா பேச்சு..!

294

தமிழ் மொழி தெரியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன், தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசை, விரைவில் கற்றுக்கொண்டு பேசுவேன் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற Listening,Learning,Leading என்ற வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கல்லூரி மாணவரிலிருந்து துணை குடியரசு தலைவர் வரை வெங்கையா நாயுடு வாழ்கை ஒரு சிறந்த பாடம் என்று அவர் கூறினார். அவசர நிலையின் போது ஜனநாயகத்தை மீட்க போராடி சிறையில் வாடியவர் வெங்கையா என்று அமித் ஷா கூறினார்.