டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமித்ஷாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.