மீண்டும் தொடங்கிய இந்தி பிரச்சனை..! நாடு முழுவதும் ஒரே மொழி..! சர்ச்சையை கிளப்பிய அமித்ஷா..!

805

கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதிய கல்விக்கொள்கை வெளியானது. அதில் மும்மொழிக்கொள்கை திட்டம் கொண்டுவர இருப்பதாக கூறப்பட்டது. மக்களின் கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து, அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக பாஜகவின் தலைவர் அமித்ஷா டுவிட்டரில் டுவீட் போட்டிருந்தார். அதில், இந்தியா பல மொழிளை கொண்ட ஒரு நாடு என்றும், இங்கு ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு என்றும் தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த ஒரு மொழி வேண்டும் என்று கூறிய அவர், நாட்டை ஒரே மொழி ஒருமைப்படுத்த வேண்டும் என்றால் அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகும் என்று தெரிவித்தார்.

இவரின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு தென்தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.