“திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்..” – அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட வீடியோ..!

768

இந்தி குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த அமித்ஷாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

இந்தி தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தி மொழி இருந்தால் மட்டுமே இந்தியாவிற்கு அடையாளமாக இருக்கும்” என பேசியிருந்தார். இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் இந்தி திணிப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement