அமமுக யாருடன் கூட்டணி? – டிடிவி பதில்

181
ammk alliance

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு என அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகின்றனர். காங்கிரஸ்-திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி,மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுகின்றன.இதுமட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணி குறித்து இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பாஜக விடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணியில் தேமுதிக பாமக இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மும்முனைப்போட்டியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலின் தேதி அறிவித்த பிறகு அம்மா மக்கள்  முன்னேற்றக் கழகம்  கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவுகள் பெருகி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த தேர்தல் அக்கட்சிக்கு முக்கிய பலப்பரிட்சையாக பார்க்கப்படுகிறது.