அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு

125

தமிழ்நாடு சட்டசபையில் மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 7-வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் நேருக்குநேர் மோதும் அ.தி.மு.க.வும் தி.மு.கவும் முறையே இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் கமிஷன் இன்றிரவு ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of