அமமுக-வுக்கு நிச்சயமாக குக்கர் சின்னம் கிடைக்கும் – டிடிவி தினகரன்

279

அமமுக-வுக்கு நிச்சயமாக  குக்கர் சின்னம் கிடைக்கும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக சார்பில் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பணிமனை டிடிவி தினகரன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், குக்கர் சின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் என்றும் குக்கர் சின்னம் கிடைத்த பிறகே வேட்பு மனுத்தாக்கல் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

ஒருவேளை குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தனி சின்னத்தில் போட்டியிட்டு கூட தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்த தினகரன், தனி சின்னத்தில் நின்றாலும் மக்கள் தங்கள் சின்னத்தை கண்டறிந்து வாக்களிப்பார்கள் என்று கூறினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of