தனது பதவியை விட்டுக் கொடுத்த டி.டி.வி.தினகரன்..!

1064

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனால் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மேல் மட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இதனையடுத்து, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

மேலும், தினகரனுக்கு நம்பிக்கை உரியவராக திகழ்ந்த பாப்புலர் முத்தையா அதிமுகவிலும், அமமுக கொள்ளை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் திமுகவிலும் இணைந்தனர்.

இதனிடையே, அமமுகவில் தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா விரைவில் தாய் கழகத்தில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறி வருவதால் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் அமமுகவில் இருந்து விலகி திமுக அல்லது அதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் கசிந்தன.

இதனை அறிந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பழனிப்பனை சரிகட்டும் விதமாக, தான் முன்பு இருந்த பதவியான துணை செயலாளர் பதவியை, அவருக்கு வழங்கியுள்ளார். மற்றொருவான தஞ்சை ரெங்கசாமிக்கும் துணை செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.

அதேபோல், அமமுக பொருளாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பி.வெற்றிவேலும், அமமுக கொள்கை பரப்புச்செயலாளர் தங்க தமிழ்செல்வன் விலகலை அடுத்து சி.ஆர்.சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமமுக தலைமை நிலையச் செயலாளராக திருச்சி ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of