இதுவே தெரியாம போட்டியா? தர்மசங்கடத்தில் மாட்டிய அமமுக வேட்பாளர்!

967

தூத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி, அதிமுக கூட்டணியில், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அமமுக சார்பில் வேட்பாளராக புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் பேசியது பின்வருமாறு:-

“மக்களையெல்லாம் சந்தித்துவிட்டு வந்தபிறகு என்னுடைய கணிப்புப்படி, சுமார் ஒன்றரை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை தோற்கடிப்பேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் ஆரவாரத்துடன் கைதட்டினர். அதன் பிறகுதான், தப்பை உணர்ந்த பக்கத்தில் இருந்த ஒரு நிர்வாகி, தூத்துக்குடி தொகுதியில் மொத்த வாக்குகள், 14 லட்சம்.

ஆனால், நீங்க ஒன்றரை கோடி என கூறிவிட்டீர்கள் என காதில் கிசுகிசுத்தார். இதைக் கேட்டுக்கொண்ட, புவனேஸ்வரன், மன்னித்து விடுங்கள், ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என கூறினார்.

இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of