அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்..!

4051

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக பதவி வகித்து வந்தவர் வெற்றிவேல். இவர், 2011-ல் சென்னை ஆர்.கே நகர் தொகுதியிலும், 2016-ல் பெரம்பூர் தொகுதியிலும், சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார்.

ஜெயலலிதா போட்டியிடுவதற்காக சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை விட்டுக்கொடுத்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement