கேரள மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள்

351
amritha

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு திருச்சி அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் சார்பில் வழங்கிய நிவாரண பொருட்கள் சத்தியம் தொலைக்காட்சி மூலம் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அதேபோல் நமது சத்தியம் தொலைக்காட்சியும் பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட நிவாரண பொருட்களை கேரளாவிற்கு அனுப்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், வெள்ளத்தால் வீடுகளையும், உடமைகளையும் இழந்து துயரத்தை அனுபவித்து வரும் கேரள மக்களுக்கு உதவ முன்வந்தனர்.

அவர்களால் இயன்ற அளவில் சேகரித்த நிவாரணப்பொருட்களை சத்தியம் தொலைக்காட்சி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.