மோடிக்கு வாழ்த்து சொல்லி வசமாய் சிக்கிய முதலமைச்சரின் மனைவி..!

568

நாட்டின் பிரதமராகவும், பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் நரேந்திர மோடி. இவர் தனது 69-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இதையொட்டி, மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

ஆனால் அது தற்போது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. அவர் போட்ட டுவீட்டில்,

“இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தேசத்தந்தை பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் நாட்டின் நண்மைக்காக எப்போதும் உழைத்துக்கொண்டிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள், காந்தி தான் தேசத்தந்தை என்றும், இவ்வாறு கூறுவது முறையல்ல என்றும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement