மோடி, இஸ்ரோ தலைவரை தேற்றிய நிகழ்வை சித்தரிக்கும் கார்ட்டூன்

690

விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பார்வையிட இஸ்ரோ மையத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி, கண்கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனை
கட்டியணைத்து ஆறுதல் கூறினார். பிரதமர் மோடியின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்ததோடு, பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு
ஆதரவாகவும், வாழ்த்து தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமுல் நிறுவனமும் சந்திராயன் – 2 திட்டம்
குறித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. அமுல் நிறுவனத்தின் தனித்துவமான கார்ட்டூன் உருவத்தில், பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவரை தேற்றுவதை
சித்தரிக்கும் வகையிலான படமும், அதனோடு சந்திராயன்-2ன் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும், திட்டம் விரைவில் முழுமையடையும்
என்ற வாசகமும் பதிவிடப்பட்டிருந்தது.

Advertisement