வைகைப்புயலுக்கு கிடைக்காத பாக்கியம்…! தமிழக மக்களுக்கு கிடைக்க உள்ளது…!

933

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் அமுல். இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில், தங்களின் கிளைகளை நிறுவி நீண்ட வருடமாக செயல்பட்டு வருகிறது.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்று வரும் இந்த நிறுவனம், புதுமையான முயற்சி ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளது. அது என்னவென்றால், ஒட்டகப்பாலை இந்தியா முழுவதும் விற்க முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய அமுல் நிர்வாக இயக்குனர் சோதி, இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் ஒட்டகப்பாலை அறிமுகம் செய்ய உள்ளோம். 200 மில்லி லிட்டர் பெட் பாட்டிலில் விற்க உள்ளோம். இதன் விலையை 25 ரூபாய் ஆக நிர்ணயம் செய்துள்ளோம். என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கொடி கட்டுப் படத்தில் வைகைப்புயல் வடிவேலு ஒட்டகப்பால்லா டீ போடு டா என்று ஒரு வசனம் பேசியிருப்பார். ஆனால் அவருக்கு கடைசி வரை அந்த படத்தில் ஒட்டகப்பால்ல டீ கிடைத்திருக்காது. அப்போது அவருக்கு கிடைக்காத அந்த பாக்கியம் தற்போது, தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் நகைச்சுவையாக பேசி வருகின்றனர்.

Advertisement