அன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று எமிக்கு! ஐயோ போச்சே போச்சே!

759

பாகுபலி 2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி வரும் மெகா பட்ஜெட் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக ஆலியா பட்டும், ஜூனியர் என்.டி.ஆர்.

ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்சி எட்கர் ஜோன்ஸும் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் டெய்சி தனிப்பட்ட காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். டெய்சி விலகிய பிறகு அவருக்கு பதில் ஏமி ஜாக்சனை நடிக்க வைக்க திட்டமிட்டாராம் ராஜமவுலி.

இந்நிலையில் ஏமி தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகே ஏமியை நடிக்க வைக்கும் ஐடியாவை கைவிட்டாராம் ராஜமவுலி. சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் சிம்ரனுக்கு தான் கிடைத்தது.

படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிம்ரன் படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகே அந்த வாய்ப்பு ஜோதிகாவுக்கு கிடைத்தது. சிம்ரனை போன்றே ஏமிக்கும் ஒரு அரிய வாய்ப்பு கை நழுவியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of