முடிந்தது எமி நிச்சயதார்த்தம்

379

நடிகை எமி ஜாக்சன் அவரது காதலருடன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

மதராசபட்டணத்தில் கதாநாயகியாக  அறிமுகமானவர் எமி. தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, 2.0 போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

எமிக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோ என்பவருக்கும் காதல் மலர்ந்ததையடுத்து இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்த அவர்களது ஜோடி புகைப்படத்தை வெளியிட்டு, “அவரை காதலிப்பதாகவும் ஒரு புதிய வாழ்க்கை தொடங்கி இந்த உலகின் மகிழ்ச்சியான பெண்ணாக மாறி இருப்பதாகவும் எமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.