பாஜகவுக்கு எதிரான மாற்று அணி தாமாகவே உருவாகும்: சந்திரபாபு நாயுடு

635

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றாததால், இந்த ஆண்டின் தொடக்கத்தின் தெலுங்கு தேச கட்சி, பாஜகவுடன் இருந்த கூட்டணியில் இருந்து விலகியது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மாற்றான அணியை உருவாக்கும் முயற்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி ஈடுபடும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாஜகவுக்கு எதிரான மாற்று அணி தானாகவே உருவாகும். பிரதமர் மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே, மக்களே ஒரு மாற்று அணியை தேர்வு செய்வர் எனக் கூறினார்.