ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு மணி நேரம் அவகாசம் – முதன்மை கல்வி அலுவலர்.

107

ஸ்டிரைக் செய்யும் ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு மணி நேரம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

மேலும் , ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.