7 தமிழர்கள் விடுதலை உறுதி? அன்புமணி

168

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக குழு அமைக்க முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளதாக கூறினார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசியதாக தெரிவித்த அன்புமணி, காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவையும் முதலமைச்சரிடம் அளித்ததாக கூறினார்.

மேலும், பாஜக – பாமக இடையே சுமுகமான உறவு உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களும், விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் , தமிழகத்தில் பூரண மதுவிலக்கு விரைவில் அமலுக்கு வரும் என்றும் அன்புமணி ராமதாஸ் உறுதியாக தெரிவித்தார்.