திமுக விடம் சேரவில்லையென வயிற்றெரிச்சல் – அன்புமணி காட்டம்

414

திமுகவுடன் பாமக சேரவில்லை என்ற வயிற்றெரிச்சலில் திட்டமிட்டு பொய்த் தகவல்களை திமுகவினர் பரப்பி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அன்புமணி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , காவிரி உபரி நீர் திட்டத்திற்காக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படவுள்ளதாகவும் இது குறித்து விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் கூறினார். மேலும் தெரிவித்த அவர், திமுகவுடன் பாமக சேரவில்லை என்ற வயிற்றெரிச்சலில் திட்டமிட்டு பொய்த் தகவல்களை திமுகவினர் பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of