பூத்தில் நாம்தான் இருப்போம்.., புரியுதா? அன்புமணி சர்ச்சை பேச்சு

826

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பிடித்து உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக இளைஞரணி செயலாளர் எம்.பி அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று அன்புமணி பிரச்சாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இவர் பிரச்சாரம் செய்தார்.
அவர் தனது பேச்சில், தேர்தலில் என்ன நடக்கும் தெரியுமா. பூத்தில் யார் இருப்பார்கள். நம்ம தான் இப்போம் பூத்தில். சொல்றது புரியுதா இல்லையா? நாமதான் இருப்போம். புரிஞ்சிக்கிட்டிங்களா. வெற்றி யார் பெறப்போறாங்கன்னு சொல்லனுமா வெளியில், என்று அன்புமணி குறிப்பிட்டு இருக்கிறார்.

அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக கூட்டணி கட்சிகள் பூத்தை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கிறதா, தேர்தலில் முறைகேடு நடக்க போகிறதா? என்று பெரிய கேள்வியும், விவாதமும் எழுந்து இருக்கிறது. இவரின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அன்புமணியின் பேச்சுக்கு எதிராக புகார் அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விரைவில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of