அன்புமணி ராமதாஸ் பிரசார வேன் மீது கல்வீச்சு.., தொண்டர்கள் சாலை மறியல்

1539

இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும், அதனுடன் தமிழகத்தின் இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலை அதிமுக கூட்டணயில் தேர்தலை சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மெணசி பகுதியில் பிரசாரத்திற்கு சென்றனர்.

அப்போது மர்ம ஆசாமிகள் யாரோ வேட்பாளர்கள் சென்ற பிரசார வேன் மீது கல்வீசினர். இதனால் வேட்பாளர்கள் அன்புமணி ராமதாஸ், கோவிந்தசாமி ஆகியோர் மெணசி பகுதியில் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர், பா.ம.க. வினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மெணசியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர்.