திமுக, அதிமுக ஆட்சி செய்ய பாமக தொடங்கப்படவில்லை – அன்புமணி ராமதாஸ்

341

திமுக, அதி.மு.க.காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சி செய்வதற்காக பாமக தொடங்க வில்லை என்றும் எங்கள் கட்சி ஆட்சியமைக்கவே கட்சி தொடங்கியதாக, அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அடுத்த மேச்சேரியில் பாமகவின் முப்படை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புணி, பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆவதாக கூறினார்.

பின்தங்கியுள்ள மக்களின் உண்மை நிலையை அறிய மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.