தண்ணீர் கொடுக்கச்சொன்ன அன்புமணி.. தண்ணி காட்டிய செய்தியாளர்கள்.. விறு விறு சந்திப்பு..

1245
Anbumani

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக கூட்டணி அமைத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது.

அதிமுக – திமுக என திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், அதிமுக வுடனான கூட்டணி ஏன்? என்ற கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர். ஊழல் குற்றச்சாட்டுகளையும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விமர்சித்த பாமக இப்பொழுது அதிமுகவிடம் கூட்டணி வைத்தது ஏன்? என கேட்டனர். அதுமட்டுமல்லாமல் குட்கா ஊழல் குறித்து அமைச்சர்களையும் விமர்சித்தீர்கள்.

குறிப்பாக அதிமுக ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் என அனைவரையும் கடுமையாக விமர்சித்த அன்புமணி, இப்பொழுது தேர்தலில் அவர்களிடம் கூட்டணி வைத்தது மக்களை ஏமாற்றுவதாக இல்லையா என அடுக்கடுக்கான கேள்விகளால் பதிலளிக்க முடியாமல் திணறினார் அன்புமணி.

தொடர் கேள்விகளால் துளைத்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு திணறிய அன்புமணி ராமதாஸ், ஒரு கட்டத்தில் கோபமடைந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் கோபமடைந்த அன்புமணி, பத்திரிகையாளர் ஒருவருக்கு, ”அவருக்கு தண்ணி கொடுங்கப்பா” ரொம்ப ஆவேசமா இருக்காரு என சிரித்து சமாளித்தார் அன்புமணி.

ஏற்கனவே திராவிட கட்சிகளிடம் 100 க்கு 101 சதவீதம் கூட்டணி வைக்கமாட்டோம் என அன்புமணியும், 100 க்கு 200 சதவீதம் அவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என ராமதாஸும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of