அந்தமானில் திடீர் நிலநடுக்கம் – சுனாமி பீதியால் பொதுமக்கள் அச்சம்

479

அந்தமான் தீவுகள் அருகே திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் மக்கள் பீதியில் உள்ளனர்.

அந்தமான் தீவுகள் அருகே நள்ளிரவு 1.51 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் 10 கி.மீ ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னையிலும் லேசான இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.ஆனால் வானிலை ஆய்வு மையம் கூறுகையில் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of