“விஜய் 64” துணிச்சலான பெண்ணாக களமிறங்கும் ஆண்ட்ரியா | Vijay 64

326

பிகிள் படத்திற்கு பிறகு 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் படம் தான் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இதில் ஆண்ட்ரியாவிற்கு துணிச்சல் மிகுந்த பெண் வேடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தில், அவருக்கு சண்டை காட்சிகள் இருக்கிறதாம். சண்டை காட்சிகளில் நடிக்க அவர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற இருக்கிறது.