அந்தாகாரம் படம் எப்படி உள்ளது..? திரைவிமர்சனம்..!

2166

கதைச்சுருக்கம்:-

கிரிக்கெட் கோச்சாக அர்ஜுன் தாஸ் பணியாற்றி வருகிறார். அவரது வீட்டில் இருக்கும் Landline பிரச்சனையாகி விடுவதால், புதியதாக இன்னொரு Landline-னை அனுப்பி விடுகிறார்கள். பிறகு, அந்த போன் எண்ணிற்கு அழைத்து, அர்ஜுன் தாஸை மர்ம நபர் மிரட்டுகிறார். யார் அந்த நபர்..? எதற்காக அழைப்பு விடுக்கிறார்..? என்பதே படத்தின் மீதிக்கதை..

விமர்சனம்:-

படத்தின் கதை மேலே கூறியது தான். ஆனால், இதுதான் கதை என்பது புரிந்துக்கொள்வதற்கு அரை மணி நேரம் எடுக்கும். ரசிகர்களை ஆரம்பத்தில் இருந்து குழப்பிக்கொண்டே செல்லும் இயக்குநர், ஒரு கட்டத்தில் கட்டிப்போடுகிறார்.

எதையும் கவனிக்க விடாமல், படத்தை மட்டுமே பார்க்க வைக்கிறார். இருக்கையின் நுனியில் வந்து அமர வைத்து விடுகிறார். படத்தின் இறுதியில் வெளியாகும் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும்.

படத்தின் அடுத்த பலம் என்னவென்றால், அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் ஆகியோரின் அபாரமான நடிப்பு.. ஒரு உலகத்தை உருவாக்கி, அந்த உலகத்தின் உள்ளேயே நம்மை அழைத்து சென்றுவிடுகிறார்கள். அடுத்தது கேமராவும், பின்னணி இசையும் படத்தை மேலும் மெருகூட்டுகின்றன.

மைனசாக எதையும் சொல்ல முடியாது. ஒரு சிலர் படத்தின் நீளம் பற்றி குறை கூறுகிறார்கள். ஆனால், அந்த படத்தின் கதையை எடுத்து செல்வதற்கு இத்தகைய நீளம் தேவை என்பதே உண்மை.

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.. சாதாரண மசால படங்களை பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்..

Advertisement