மனைவி கோடாரியால் வெட்டிக்கொலை.. 2-வது மனைவியின் மீதும் சந்தேகம்.. 8 மாத குழந்தையை துடிக்க கொன்ற சந்தேக சைக்கோ..!

291

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ராச்சாராம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்புள்ளையா.இவரது மனைவி லட்சுமி தேவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கோடாரியால் வெட்டி லட்சுமி தேவியை கொன்றதற்காக 8 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ரமாதேவி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 மாத குழந்தை ஒன்று இருந்தது.

குழந்தை பிறந்த‌து முதலே ரமாதேவி மீதும் சந்தேகம் ஏற்பட்டு நித்த‌ம் நித்தம் அடி உதை என துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் சின்னப்புள்ளையா.

ஒருகட்டத்தில் காட்டுமிராண்டி தனமாக தகராறில் ஈடுபட்ட சின்னப்புள்ளையாவின் கையில் அகப்பட்ட 8 மாத குழந்தையை தரையில் ஓங்கி அடித்து அதை கொடூரமாக கொன்றுள்ளார்.

ஆத்திரம் அடங்காத சின்னப்புள்ளையா பெற்ற மனது துடிக்க கதறி அழுத ரமாதேவி மீது கத்தியால் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் அந்த சைக்கோ. கதறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமாதேவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உயிரிழந்த பச்சிளம் குழந்தையை கண்டு அக்கம் பக்கத்தினரும் கண்ணீர் சிந்தினர். ரமாதேவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய சந்தேக சைக்கோ சின்னபுள்ளையாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.