மரியாதை லேது..! கௌரவம் லேது..! – ஆந்திர சட்டசபையில் நடந்த உச்சக்கட்ட மோதல்..!

1181

ஆந்திரா சட்டப்பேரவையில் வட்டியில்லா கடன்கள் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. இது தொடர்பாக ஆளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசத்துக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

முதல்வர் வட்டியில்லா கடன்கள் குறித்து தவறான தகவல்களைப் பதிவு செய்கிறார் என்று தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக உரிமை மீறல் தீர்மானம் கொடுக்கப்பட்டது. அப்படித் தவறான தகவல்களை ஜெகன் அளித்துள்ளார் என நாங்கள் நிரூபித்தால் பதவி விலக அவர் தயாரா எனச் சந்திரபாபு நாயுடு சவால் விடுத்தார்.

இதையடுத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, `எங்கள் ஆதரவாளர்கள் இங்கு 150 பேர் உள்ளனர். அவர்கள் எழுந்து வந்தால் நீங்கள் தரையில்கூட அமர முடியாது. என்ன பேசுகிறீர்கள் நீங்கள்.

உங்களிடம் மரியாதை இல்லை, கௌரவம் இல்லை. முதல்வர் என்ற முறையில் நான் தனியாக நின்று உங்களைச் சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு பேசும்போது நாங்கள் யாராவது வாய்திறந்தோமா. யாருக்காவது அறிவு உள்ளதா? இங்கு சட்டமன்ற கூட்டம் நடப்பது உங்களில் ஒருவருக்காவது ஞாபகம் உள்ளதா’ எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவைப் பார்த்து, ‘ நீங்கள் இப்படி கண்களைப் பெரிதாக்கிப் பார்த்தால் நாங்கள் அனைவரும் பயந்துவிடுவோமா என்ன. எங்களுக்கு பயம் இல்லை.

உங்கள் ஆதரவாளர்களை முதலில் அமரச் சொல்லுங்கள்’ எனக் கடுமையாகப் பேசினார். இதனால் ஆந்திர சட்டப்பேரவையில் அமளி எழுந்தது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of