புதிய ஆந்திரா முதல்வர் ஜெகன் ரெட்டி பிரதமருடன் சந்திப்பு

1021

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மோடி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதா? அல்லது பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என்றும், டெல்லியில் உள்ள ஆந்திர பவன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு சால்வை போர்த்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement