மணல் வியபாரிகளுக்கு அதிர்ச்சி! மக்கள் மகிழ்ச்சி! அரசின் அதிரடி முயற்சி!

1793

ஆந்திராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து முதலமைச்சராக பதவி எடுத்த ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

எடுத்துக்காட்டாக, சனிக்கிழமைகளில் பள்ளி குழந்தைகள் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வரவேண்டாம், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் தாய்மார்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் என பல்வேறு அதிரடி திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆந்திர மாநில சுரங்கத்துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,

“ஆந்திராவில் இன்று முதல் மணல் எடுக்கும் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இனி (நேற்று) ஆந்திர மாநிலம் முழுவதும் மணல் எடுக்க உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.

எந்த இடத்திலாவது மணல் எடுத்தால் அல்லது மணலை கடத்தி கொண்டு செல்ல முயன்றால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். மணலைக் கொண்டு செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய அந்தந்த மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஜூலை 1ம் தேதி முதல் மணல் எடுப்பதற்கான புதிய பாலிசி திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. சுரங்க துறையின் மூலமாக கடந்தாண்டு ரூ2643 கோடி மட்டுமே வருவாய் வந்தது. மணல் விற்பனையை இலவசமாக அறிவிக்கப்பட்டதால் அரசுக்கு எந்தவித வருவாயும் வரவில்லை.

இதனால் தனிப்பட்ட நபர்களே லாபம் அடைந்துள்ளனர். ஊழலற்ற முறையில் மணலை அரசே விற்பனை செய்யும். இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் புதிய பாலிசி திட்டம் கொண்டு வரப்படும்”

இவ்வாறு கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of