தமிழ்நாடு போலீசுக்கு கிடைக்காத ‘ஆஃபர்!’ ஆந்திர அரசு ‘சூப்பர்!’ மகிழ்ச்சியில் ஆந்திர போலீஸ்!

1009

ஆந்திராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் காவல்துறைக்கு தனது அடுத்த திட்டத்தை எடுத்து வைத்துள்ளார். இதுகுறித்து விஜயவாடாவில் கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

“காவலர் முதல் ஆய்வாளர் வரை ஷிப்ட் முறையில் வார விடுமுறை எடுக்கலாம்.

சில மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற்ற பின்பு மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்.

மேலும் காவல்துறை காலிப்பணி இடங்களில் தேவைப்படும் பட்சத்தில் கட்டாய ஓய்வில் சென்றவர்கள் மற்றும் சஸ்பெண்ட்டில் உள்ளவர்களையும் பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என முடிவு எடுத்து எடுத்துள்ளோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.