கரையை கடக்க தொடங்கியது புயல் சின்னம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

1267

வங்ககடலில் நிலவி வரும் புயல் சின்னம் கரையை கடப்பதால் வடமேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்க கடலின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உருவான புயல் சின்னம், ஆந்திராவின் கலிங்கபட்டணம் பகுதியில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இந்த புயல், ஆந்திராவின் விசாகப்பட்டனம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கஜபதி, கஞ்சம், குர்தா, நயாகர், மற்றும் பூரி மாவட்டங்களை தாக்க தொடங்கியுள்ளது.

இதனால் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். மேலும் வடமேற்கு வங்ககடல் மற்றும் ஆந்திராவை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement