ஆந்திராவில் தேர்தல் கலவரம் – இருகட்சியினரின் மோதலால் இருவர் உயிரிழப்பு

644

ஆந்திராவில் ஒய் ஸ் ஆர் காங்கிரஸாருக்கும் , தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் இரு கட்சியை சேர்ந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் தெலுங்குதேசம்-ஒய்.எஸ்.ஆர். கட்சித் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். மோதலில் பலத்த காயம் அடைந்த சித்தா பாஸ்கர் ரெட்டி என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி தொகுதிக்குட்பட்ட வீராபுரத்தில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். வாக்காளர்களிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி இருதரப்பும் கூறியதால் ஏற்பட்ட கைகலப்பு மோதலில் முடிந்தது.

முன்னதாக ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதணன் குப்தா என்பர் ஆந்திர மாநிலத்தில் வாக்களிக்க சென்ற பொழுது பெயரில் பிழை இருந்ததால் ஓட்டு மெசினை அடித்து நொறுக்கியதால் அந்த வாக்குச்சாவடிக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of