ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

445

ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. அங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பணம் எண்ணும் பணி நடைபெற்று வரகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of