ஆந்திராவிலும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு

350

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மாமனார் என்.டி.ஆர்.-ஐ முதுகில் குத்தி விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற மோடி, அங்கு கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் அல்லாத ஆந்திராவை உருவாக்க வேண்டும் என்ற என்.டி.ஆரின் லட்சியத்தை மீறி சந்திரபாபு நாயுடு செயல்பட்டு, அவரை முதுகில் குத்தி விட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தற்போது சந்திரபாபு நாயுடு செய்து வரும் திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசு கொண்டு வந்தது தான் என்றும் மோடி தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார்.