ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம் சட்டசபை தேர்தல்.., வேட்பாளர் பட்டியல்

328

175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 11-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் இங்குள்ள 123 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டது.

இதேபோல், 60 உறுப்பினர்களை கொண்ட அருணாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைக்கும் ஏப்ரல் 11-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட பட்டியலையும் பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம் முதல் மந்திரி பெமா கன்டு முக்தோ தொகுதியில் போட்டியிடுவார் என இந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of