இரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்

1102

இரத்த சோகை என்றால் என்ன..? :

நம்  உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையோ அல்லது Haemoglobin-னின் அளவோ எப்போதும் இருக்கின்ற அளவினை விட குறைந்து காணப்பட்டால் அது இரத்த சோகை (Anemia) என்றழைக்கப்படும். RBCஇரத்த சிவப்பணுக்களினை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்றாகும். இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாமல் போகும்பொழுது உடலுக்கு தேவையான Oxygen-ம் கிடைக்காமல் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு நிறைய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளும் வரும்.

அறிகுறிகள் :

உடல் வலி, மிகுந்த களைப்பு, மூச்சு திணறல், தலைசுற்றல், செரிமானமின்மை, பசியின்மை, மன அழுத்தம், முடி உதிர்தல், சருமத்தில் மஞ்சள் நிற மாற்றம், வேகமான இதயத்துடிப்பு, உணர்ச்சியற்ற பாதங்கள், எளிதில் உடையக்கூடிய விரல் நகங்கள், மற்றும் தலைவலி.

நிறமற்ற கண்கள் : ஒருவர் உண்மை சொல்கிறார்களா அல்லது பொய் கூறுகிறார்களா என்பதை அவர்களின் கண்களை வைத்து அறிந்துக்கொள்ள முடியும் என்று பலர் கூற கேட்டிருப்போம். அதுமட்டுமின்றி, இரத்த சோகை இருக்கின்றதா என்பதனையும் கண்டுபிடிக்கமுடியும். அதற்கு கண்ணின் கீழ் இமையை கீழ் நோக்கி இழுக்கும் பொழுது, அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறமின்றி நிறமற்று காணப்பட்டால் அது இரத்த சோகைக்கான அறிகுறியாகும்.Anemia-Eyes-CheckUp

வெண்மையான விரல்கள் : ஒருவர் ஆரோக்கியமுடன்  இருப்பதை அறிந்துக்கொள்ள அவர்களது கைவிரல்களை அழுத்தும்பொழுது தெரிந்துவிடும். ஏனெனில், ரத்தமானது நாம் விரலினை அழுத்தும்பொழுது விரல் முனைக்கு வரும் அப்படி வராது விரல் நுனி வென்மையாகவே காணபட்டால் இரத்த சோகை இருப்பதாக அர்த்தம்.ForeFinger

குமட்டல் : காலையில் படுக்கையில் இருந்து எழமுடியாமல் மயக்கமோ அல்லது குமட்டலோ வரும்.Vomitting

மூச்சு திணறல் : இரத்த சோகை இருந்தால் நம்மால் சரியாக சுவாசிக்க முடியாது. ஏனென்றால், Oxygen-ஐ சுமந்துசெல்லும் இரத்தமானது குறைவாக இருக்கும்பொழுது சிறிது நேரம் நடந்தாலே அதிகமாக மூச்சு வாங்கும் அதுமட்டுமில்லாது குறைவான Oxygen இதயத்துக்கு கிடைப்பதால் இதயமானது படபடப்புடன் இருக்கும்.Respiratory-Problem

தவிர்க்கவேண்டிய உணவுகள் :

குளிர் பானங்கள், Tea, Coffee, Ice Cream மற்றும் Chocolate.

உண்ணவேண்டியவை :

ரத்த சோகை இருக்கும்பொழுது இரும்புச் சத்துள்ள உணவினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கீரை வகைகள் : முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கிரை மற்றும் மணத்தக்காளிக்கீரை.கீரை-வகைகள்

காய்கறிகள் : பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழக்காய், Carrot, காலிபிளவர், இஞ்சி, தக்காளி, புதினா, பீன்ஸ், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை.காய்கறிகள்

கனிகள் : சீதாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளம்பழம், தர்பூசணி, சப்போட்டா, பேரீட்சை, வாழைப்பழங்கள், Apple, ஆரஞ்சு, பிளம்ஸ், அத்திப்பழம், பப்பாளி, மாம்பழம், பலாபழம், நெல்லிக்கனி, உலர்ந்த திராட்சை மற்றும் எலுமிச்சை பழம்.கனிகள்

தானியங்கள் மற்றும் பருப்பு : கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, உளுந்தங்களி, Oats, சுண்டல், முந்திரி, சோயாபீன்ஸ் மற்றும் பட்டாணிதானியங்கள்-மற்றும்-பருப்பு

இறைச்சி வகைகள் : ஆட்டுக்கறி, ஈரல்,  முட்டை, மீன் மற்றும் இறால்

மேல் கண்ட அறிகுறிகளை நீங்கள்  உணர்ந்தால், உடனே இரத்த பரிசோதனை செய்து Haemoglobin அளவினை தெரிந்துக்கொண்டு முறையான உணவுமுறைகளை கடைபியுங்கள்.

உண்ணும் உணவே மருந்து. ஆதலால்; நாம் எடுத்துக்கொள்ளும் உணவு சரியாக இருந்தால் எவ்வித நோயும் நம்மை அண்டாது.உண்ணும்-உணவே-மருந்து

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of