கடன் சுமை… அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால் ஆகிறது!

646

அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடனில் சிக்கித் தவித்து வருகிறது.ஜியோவின் வருகையும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விற்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதுவரை சொத்துகளை விற்க முடியாததால், ஸ்வீடன் நாட்டின் எரிக்சன் நிறுவனம் தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அதில் அனில் அம்பானியை கைது செய்து தங்களுக்கு சேர வேண்டிய ரூ.550 கோடியை திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குத் தொடரப்பட்ட நிலையில், திவாலானதாக அறிவிக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, சொத்துகளை விற்க 2017-ம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.

இன்னும் அதை விற்க முடியவில்லை. இதனால், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.இதுபற்றி கம்பெனி இயக்குனர்கள் குழு ஆலோசனை நடத்தியது. அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க, மும்பையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of