நஷ்டத்தில் சென்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்..! அனில் அம்பானியின் பகீர் முடிவு..! அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

588

இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்து வந்தவர் அனில் அம்பானி. கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனம் பெரும் நஷ்டத்தை அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தன்னுடைய பதவியில் இருந்து, அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.

 

இவருடன் சேர்ந்து, சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கெர், சுரேஷ் ரங்காஷார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தொலை தொடர்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ஜூலை- செப்டம்பர் 2019 காலகட்டத்தில் மட்டும் 30,142 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of