சாலை திட்டத்தை கைவிடுகிறார் அனில் அம்பானி

211

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் அதன் டில்லி – ஆக்ரா நெடுஞ்சாலை பராமரிப்பு திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது.இத்திட்டத்தை, டி.ஏ.டி.ஆர்., நிறுவனம் நிர்வகிக்கிறது.
இந்நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை சிங்கப்பூரைச் சேர்ந்த ‘கியூப் ஹைவேஸ்’ நிறுவனத்திற்கு 3,600 கோடி ரூபாய்க்கு விற்க உள்ளதாக ரிலையன்ஸ் இன்ப்ரா தெரிவித்துள்ளது. இத்துடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தர வேண்டிய 1,200 கோடி ரூபாயுடன் சேர்த்து 4,800 கோடி ரூபாய் கடனை திரும்ப அளிக்க ரிலையன்ஸ் இன்ப்ரா திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் மும்பை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் 11 நெடுஞ்சாலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. டில்லி – ஆக்ரா நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவு, லாபகரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2017 -– 18ம் நிதியாண்டில் இப்பிரிவின் வருவாய் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

எனினும், கடன் சுமையை குறைக்க பொறியியல் மற்றும் கட்டுமானம் தவிர்த்து பிற பிரிவுகளில் இருந்து படிப்படியாக வெளியேற ரிலையன்ஸ் இன்ப்ரா திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of