ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் – இந்திய அரசே காரணம்

908

இந்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடியின் நண்பர் நேரடியாக பல ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு குறிப்பையும் தனது டிவிட்டர் பதிவில் இணைத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து செயல்படும் சூழ்நிலையை இந்தியா உருவாக்கி இருந்ததாக கூறினார்.

பிரான்சின் டாசால்ட் நிறுவனத்திற்கு வேறு வாய்ப்புகளே இல்லாத நிலையில் தான் அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைந்து விமானத்தை தயாரிக்க முன்வந்ததாக குறிப்பிட்டார்.

இந்த தகவலின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இது குறித்து கருத்து தெரிவிக்க இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதரகம் மறுத்துவிட்டது.

Advertisement