மிருக வதை தடுப்புச் சட்டம், தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

455
Animal-Prevention

மிருக வதை தடுப்புச் சட்டம், வெறும் காகிதப் புலியாக இல்லாமல், தீவிரமாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான சீராய்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மிருக வதை தடைச் சட்டம், மத்திய மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றில் விலங்குகளை எவ்வாறு வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மிருக வதை தடுப்புச் சட்டம், வெறும் காகிதப் புலியாக இல்லாமல், தீவிரமாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.