“இந்த வாத்தி ஸ்டெப்பு தெறிக்குதே..” அனிருத் வெளியிட்ட மாஸ் வீடியோ..!

662

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியான நிலையில், வாத்தி கம்மிங் என்ற பாடல் பெருமளவில் ஹிட் அடித்தது.

அதுமட்டுமின்றி, அந்த பாடலில் இடம் பெற்ற விஜய் நடன ஸ்டெப்பும் பிரபலமானது. இதையடுத்து, வாத்தி ஸ்டெப் என்று சேலஞ்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசைமைப்பாளர் அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மாணவர்கள் வாத்தி ஸ்டெப் சேலஞ்சை ஒரே நேரத்தில் செய்து காட்டுகின்றனர். மேலும், அந்த வீடியோவுக்கு கேப்சனாக, இந்த வாத்தி ஸ்டெப்பு தெரிக்குதே என்றும் அனிருத் பதிவிட்டுள்ளார்.

Advertisement