“NEET” தேர்வை பற்றி நீங்க பேசாதிங்க சிதம்பரம்! அனிதா சகோதரர் நறுக்!

962

தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தேர்தல் வரும் நிலையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, நீட் தேர்வை ஒரு போதும் ரத்து செய்யமாட்டோம் என்று கூறிவிட்டது.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறுகையில்,

“நீட் தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள் தெளிவாகத் தெரிந்துவிட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது. காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது. பாஜக அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18”

என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில்,

“நீட் தேர்வு குறித்த அரசியல் கட்சிகளின் முடிவு தெளிவாக தெரிந்துவிட்டதால்,பெற்றோரும் மாணவரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டனர்..-ப.சிதம்பரம். அப்படியே உங்க மனைவி நளினி சிதம்பரத்திற்கு தெளிவுபடுத்தி விடுங்க அய்யா. நீட் வேணும்னு கோர்ட்டுக்கு கட்டு தூக்கிட்டு போய்ட போறாங்க. நீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க சிதம்பரம்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of